விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் கார்த்தி சர்தார் கெட்-அப்பில் விஜய் முன் நின்ற சுவாரஸ்யமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் 65 வயது படமான 'பீஸ்ட்' திரைப்படம் மற்றும் கார்த்தி நடித்து வரும் 'சர்தார்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.
சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். அவர் வயதானவராக நடிக்கும் காட்சிகள் தற்போது குறித்த படப்பிடிப்பு தளத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன.
'சர்தார்' படத்துக்காக போடப்பட்ட முதியவர் கெட்-அப் உடன் நடிகர் கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்கு சென்றுள்ளார்.
முதியவர் கெட்-அப்பில் இருந்ததால், அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் கண்டு கொள்ளாத காரணத்தினால் சில நிமிடங்கள் ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்தார்.
பின்னர் நடிகர் விஜய் அருகில் சென்ற போது விஜய் கூட கார்த்தியை அடையாளம் காணவில்லை.
இதையடுத்து நான்தான் கார்த்தி என்று தன்னை விஜயிடம் அறிமுகம் செய்துள்ளார்.
கார்த்தியின் தோற்றத்தை பார்த்த வியந்து போன நடிகர் விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடியுள்ளனர்.
இதன்போது கார்த்தியிடம் பேசிய விஜய் "உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்" என்று பாராட்டி உள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்த கார்த்தி, பின்னர் தனது சர்தார் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றாராம்.